பதக்கம் வெல்லும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை அதிகரித்த ஒலிம்பிக் சங்கம்

33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி தொடங்குகிறது.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு 1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு 75 லட்சமும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு 50 லட்சமும் வழங்கப்படுகிறது. கடந்த முறை முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே 75 லட்சம், 40 லட்சம், 25 லட்சம் வழங்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)