ஜெர்மனியில் உள்ள நகரம் ஒன்றில் புறாக்களை கொல்ல முடிவு
ஜெர்மனியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைத்து புறாக்களையும் கொல்ல அந்நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொது வாக்கெடுப்பு நடத்தி ஊர் மக்களின் சம்மதம் பெற்ற பிறகே புறாக்கள் கொல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘லிம்பர்க் அன் டெர் லான்’ என்றழைக்கப்படும் இந்த சிறிய நகரத்தில் பல்லாயிரக்கணக்கான புறாக்கள் வாழ்ந்து வருவதாகவும், அவைகள் பல ஆண்டுகளாக நகர மக்களுக்கு தலைவலியாக மாறியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், புறாக்களைக் கொல்வதற்கான வழியை யோசிக்குமாறு அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை எதிரி இல்லாததால், புறாக்களால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஜூன் 20ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புறாக்களை கொல்ல நகர வாசிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நகர அதிகாரிகள் புறாக்களை கொல்ல முற்பட்ட போது, விலங்குகள் உரிமைக்காக வாதிடும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் நீதிமன்றத்திற்குச் சென்று போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.