பிரான்ஸ் தேர்தல் ; இடதுசாரி கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி
பிரான்ஸில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகளைத் தோற்கடிக்க இடதுசாரி கட்சிகள் ‘மக்கள் முன்னனி’ என்ற புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றின. பிரான்சிலும் தீவிர வலதுசாரி கட்சியா தேசியவாத பேரணி கட்சி அதிக வாக்குகளை பெற்றது.
அதிபர் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சி பெரிய வித்தியாசத்தில் 2ம் இடத்தை பெற்றது அதேயடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டுபுதிய தேர்தல் நடத்துவதாக மேக்ரான் அறிவித்தார்.
வரும் 30ம் திகதியும் ஜூலை 7ம் திகதியும் இரு கட்டங்களாக நடைபெற விருக்கும் அந்த தேர்தலில், தற்போது வலிமையாக உள்ள தேசியவாத பேரணி கட்சியை ஒன்றுகூடி எதிர்ப்பதற்காக மேக்ரானின் அழைப்பை ஏற்று இடதுசாரி கட்சிகள் இந்த கூட்டணியை அமைத்துள்ளன.