பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஸ்பெயின் வீரர்

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இந்த சீசனுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
அடிக்கடி காயமடையும் அவரால் முன்பு போல் முழு உடல்தகுதியுடன் இருப்பது கடினமாக இருக்கிறது. இதனால் பாரீசில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில் நடால், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்ற ஸ்பெயின் இளம் வீரர் கார்லஸ் அல்காரசுடன் இணைந்து ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் விளையாட இருப்பதாக ஸ்பெயின் டென்னிஸ் சங்கம் அறிவித்தது.
38 வயதான நடால் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 22 times, 1 visits today)