புதிய அரசாங்கத்தை அமைத்த ஹைட்டியின் இடைக்கால பிரதமர்
ஹைட்டியின் இடைக்கால கவுன்சில், முன்னாள் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றியின் அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களையும் மாற்றியமைத்து, புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு,பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் பரவலான கும்பல் வன்முறையைச் சமாளிக்கத் உந்துகோலாக அமைகிறது.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) முன்னாள் பிராந்திய இயக்குநரான கேரி கோனில்லை இடைக்காலப் பிரதமராக கவுன்சில் நியமித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.
புதிய அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் நாட்டின் அரசியல் வகுப்பிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள்.
ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பில் (யுனெஸ்கோ) ஹைட்டியின் பிரதிநிதியான டொமினிக் டுபுய் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றுவார்.இது ஹைட்டிய தேசிய காவல்துறையை மேற்பார்வையிடும் முக்கியமான பதவியாகும்.
கும்பல் வன்முறையைக் கட்டுப்படுத்த ஹைட்டி அதிகாரிகள் போராடி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில், ஆயுதக் குழுக்கள் நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன, எரிபொருள் முனையங்களைத் தடுத்து, தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் மற்றும் பிற நகரங்களில் காவல் நிலையங்களை சோதனையிட்டன குறிப்பிடத்தக்கது.