T20 WC – பாகிஸ்தான் அணிக்கு 107 ஓட்டங்கள் இலக்கு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் – நவ்நீத் தலிவால் களமிறங்கினர். நவ்நீத் தலிவால் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பர்கத் சிங் 2 , நிக்கோலஸ் கிர்டன் 1, ஷ்ரேயாஸ் மொவ்வா 2, ரவீந்தர்பால் சிங் 0, சாத் பின் ஜாபர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடி வந்த ஜான்சன் அரை சதம் விளாசினார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
(Visited 21 times, 1 visits today)