சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ மீன் – வியப்பில் மக்கள்

சிங்கப்பூரில் ஓர் அரிய மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
The Untamed Paths எனும் சிங்கப்பூர் ஆய்வுக் குழுவினால் அந்த மீன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் படங்களை அது Instagramஇல் பதிவிட்டது.
சிங்கப்பூரில் இது ஓர் அரிய காட்சி எனவும் அந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதெனவும் அது பதிவில் குறிப்பிட்டது.
படங்களைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மீனின் தோற்றம். முட்டைக் கண், திரும்பிய உதடு என்று விநோதமாக இந்த மீன் காணப்பட்டுள்ளது.
Longnoser Stargazer என்றழைக்கப்படும் அந்த மீன், சிங்கப்பூர் மணலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
அந்த மீன் பொதுவாகத் தலை அளவிற்கு மட்டும் மணலில் புதைந்து கொண்டு, தனது இரைக்காகக் காத்திருப்பதாகவும் அது நட்சத்திரங்களைப் பார்ப்பது போல் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
(Visited 22 times, 1 visits today)