இந்தியா

இந்திய மக்களவை தேர்தல் 2024 – கருத்துக் கணிப்புகளை தாண்டி பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை

நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், மொத்தம் 64.20 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மக்களவை தேர்தல் முடிவுடன், ஆந்திர பிரதேசம், ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் முடிவு ஆகியனவும் இன்று வெளியாகின்றன.

குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் வலுவான போட்டி இருந்தது. இருப்பினும், தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 32 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே