ஜெர்மனியில் பணத்திற்கு விற்பனையாகும் விசா – 30ஆயிரம் யூராவால் சிக்கலில் அதிகாரி
ஜெர்மனியில் பணத்திற்கு விசா விற்பனை செய்து அதிகாரி ஒருவர் சிக்கலில் சிக்கியுள்ளார்.
ஆட்கடத்தலுக்கு உதவிய அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் ஜெர்மன் பொலிஸ் அதிகாரிகள் மனித கடத்தல் காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக சீனா மற்றும் அரேபிய நாடுகளில் இருந்து பெரும் பணக்காரர்களை இந்த நாட்டுக்குள் கடத்தி வருவதற்கு உதவி செய்துள்ளார் என்ற அடிப்படையில் 2 சட்ட தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் டுயினரல் என்று சொல்லப்படுகின்ற நகரத்தில் முக்கிய அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது இந்த நபரானவர் வெளிநாட்டவர்கள் ஜெர்மன் நாட்டுக்கு வருவதற்கு பல தடைகள் இருந்த போதிலும், இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நபர்கள் இந்த நாட்டுக்கு வருவதற்கு விசா வழங்குவதற்கு தனது அனுதியை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியானவர் 30 ஆயிரம் யூரோக்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டார் என்றும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 2 சட்ட தரணிகளும் ஜெர்மனியில் வதிவிட விசாவை பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 2 சட்ட தரணிகளின் வங்கி கணக்குக்களில் 3.5 மில்லியன் யூரோக்கள் வைப்பிலிடப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.