ஐரோப்பா செய்தி

சுவிஸ் இராணுவத்தில் இணைந்த ஈழத் தமிழ் இளைஞர்

வடக்கில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற 107 தமிழ் இளைஞர்கள் 2023 ஆம் ஆண்டு மட்டும் சுவிட்சர்லாந்தில் இராணுவ சேவையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சுவிஸ் நாட்டில் வாழும் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து ஒரு வருட காலம் சேவையாற்றுவதை சுவிஸ் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

இதன்படி, இராணுவத்தில் சேவையாற்றியமையே இவ்வாறு கருதப்படுவதாகவும்  சுவிஸ் இராணுவத்தில் இணைந்த யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட  ஹரிசன் கூறுகிறார்.

இராணுவத்தில் சேவையாற்றாதவர்களை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் மூன்று வருடங்கள் வரை நன்னடத்தை சேவையில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு வரும் இளைஞர்கள் கல்வியின் பின்னர் உயர்மட்ட வேலைகளைப் பெற முடிவதால், அந்நாட்டு இராணுவத்தில் சேர்வது அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற யுவதிகள் இராணுவத்தில் இணைந்து கொண்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு சுவிஸ் அரசில் வேலை கிடைத்த போதிலும், சுவிட்சர்லாந்தின் புதிய சட்டங்கள் 2020 ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்பட்டுள்ளன.

இதனால் அவரச சூழ்நிலைகளின் போது அவர்கள் இராணுவத்தின் சேவைக்கு அழைக்கப்படுவார்கள்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!