குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்டப்படி குற்றமாகும்
குழந்தைகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட உடல் ரீதியான தண்டனைகளைத் தடுக்கும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கமைவாக, இனிமேல் வயது வந்தவர் அல்லது ஆசிரியர் ஒரு குழந்தைக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்கினால் அது தவறு என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
“குழந்தைகளின் காதில் அடிப்பதால் காது கேளாமை ஏற்படுவதாக செய்திகள் வந்துள்ளன. குழந்தைகளுக்கு சிறந்ததை வழங்க வேண்டும் என்றால் மோசமானவை குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
இது ஜனாதிபதியின் முழு கவனம் செலுத்திய விடயமாகும். அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டம், உடல் ரீதியான தண்டனையைத் தடைசெய்வதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. .” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.