தரவரிசையில் முதலிடம் பிடித்தார் சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கட் பேரவையின் சமீபத்திய தரவரிசையின்படி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
773 போனஸ் புள்ளிகளைப் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சமரி அத்தபத்து, போட்டியின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்றார்.
சமரி அத்தபத்து இதற்கு முன்னர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் 02ஆவது இடத்தில் இருந்தார்.
முந்தைய தரவரிசையில் 01வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீராங்கனை நடாலி ஸ்கிவர் ப்ரன்ட், சமீபத்திய தரவரிசையின்படி இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)