உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட நபர் கைது
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு போலந்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலந்து வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பாவெல் கே என அடையாளம் காணப்பட்ட போலந்து நாட்டவர், ரஷ்ய இராணுவ உளவுத்துறைக்கு தகவல்களை வழங்கியதாகவும், ஜெலென்ஸ்கிக்கு எதிராக “சாத்தியமான படுகொலை முயற்சியைத் திட்டமிட ரஷ்ய சிறப்புப் படைகளுக்கு உதவியதாகவும்” சந்தேகிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
சந்தேக நபர் “ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவ புலனாய்வு சேவைகள் சார்பாக செயல்பட தயாராக இருப்பதாகவும், உக்ரைனில் நேரடியாக போரில் ஈடுபட்ட ரஷ்ய குடிமக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும்” தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
உக்ரேனிய வழக்குரைஞர்கள் இந்த நடவடிக்கைகள் குறித்து போலந்திற்கு தெரிவித்திருந்தனர், இது சந்தேக நபருக்கு எதிராக “அத்தியாவசிய ஆதாரங்களை” சேகரிக்க அவர்களுக்கு உதவியது.
தென்கிழக்கு போலந்தில் உள்ள Rzeszow-Jasionka விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்த தகவல்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சேகரித்து அனுப்பும் பணியில் சந்தேகநபர் பணிக்கப்பட்டுள்ளார் என்று உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் Andriy Kostin கூறினார்.