வீட்டு காவலுக்கு மாற்றப்பட்ட மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி
மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, கடுமையான வெப்பத்துக்கு மத்தியில் சுகாதார நடவடிக்கையாக சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
“தேவையான முன்னெச்சரிக்கைகள் தேவைப்படும் அனைவருக்கும், குறிப்பாக வயதான கைதிகள்” மத்தியில் வெப்பத் தாக்குதலைத் தடுக்க முயற்சிப்பதாக இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சூகி மற்றும் ஜனாதிபதி யு வின் மைன்ட்,இருவரும் சிறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை.
மியான்மரின் தலைநகர் நேபிடாவில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)