ஹாங்காங்கில் உள்ள கட்டடத்தில் தீவிபத்து : ஐவர் உயிரிழப்பு!

ஹாங்காங்கில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்திற்குள் இருந்தவர்களிடமிருந்து உதவி கேட்டு அழைப்புகள் தொடர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், கட்டடத்தில் இருந்தவர்களை மீட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
முதல் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று நிர்வாகத் தலைமைச் செயலாளர் எரிக் சான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)