IPL Match 15 – பெங்களூரு அணி தோல்வி
ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டுபிளிசிஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஆடிய டுபிளிசிஸ் 1 ரன்னுக்கு ஆசைபட்டு தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த க்ரீன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி லோம்ரோர் ஆர்சிபி வெற்றிக்காக போராடினார். அவர் 13 பந்தில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆக ஆர்சிபி தோல்வி உறுதியானது.
இறுதியில் ஆர்சிபி அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்தது. இதனால் லக்னோ அணி ௨௮ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது ஆர்சிபி அணிக்கு 3-வது தோல்வியாகும். இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றி ஆகும்.