முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த இஸ்ரேல் பாராளுமன்றம்
கத்தாருக்கு சொந்தமான அல் ஜசீரா உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பை தடை செய்யும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் சட்டத்திற்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நெட்வொர்க்கின் உள்ளூர் அலுவலகத்தை மூடுவதற்கு “உடனடியாக செயல்படுவேன்” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காஸாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அல் ஜசீராவின் பணியாளர்கள் மட்டுமே போர்க்களத்தில் செய்திகளை சேகரிக்க முடியும்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு நெட்வொர்க்குகளை “தற்காலிகமாக” தடை செய்ய அனுமதிக்கும் மசோதாவுக்கு இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட் ஒப்புதல் அளித்தது.
தடை 45 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும், இது புதுப்பிக்கப்படலாம். ஜூலை வரை அல்லது காஸாவில் குறிப்பிடத்தக்க சண்டை முடியும் வரை சட்டம் அமலில் இருக்கும்.
“அல் ஜசீரா இனி இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பப்படாது,” என்று திரு நெதன்யாகு X இல் எழுதினார்,
மேலும் அல் ஜசீரா நெட்வொர்க்கை “பயங்கரவாத சேனல்” என்று அழைத்தார்.