ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்தவர் பலி

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திடீரென வீசிய காற்றினால் முறிந்து விழுந்த தென்னை மரத்தின் அடியில் சிக்கி நேற்று(22) பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் சிலாபம் முகுனுவடவன பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)