ஐரோப்பா

அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 90 புலம்பெயர்ந்தோர்!

அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து 37 குழந்தைகள் உள்பட 90 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் துருக்கியில் இருந்து இத்தாலிக்கு செல்ல இருந்ததாக நம்பப்படுகிறது.

ஏதென்ஸுக்கு தென்மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் (155 மைல்) தொலைவில் உள்ள கிரேக்க தீவான கைதிராவில் இருந்து பேரிடர் அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து அதிகாரிகள் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கப்பலில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 ஆண்கள், 18 பெண்கள், 27 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளில் இருவர்  கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர், மற்றவர்கள் பதிவுக்காக அருகிலுள்ள பிரதான துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்