ஹைதராபாத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுமி
ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போன ஏழு வயது சிறுமியின் உடல் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹுமைனி சுமையா என அடையாளம் காணப்பட்ட சிறுமி, தனது பெற்றோர் முகமது அசீம் மற்றும் ஷபானா பேகம் ஆகியோருடன் தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த போது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புகாரை தொடர்ந்து ஹுமைனி சுமையாவின் தாய் மீண்டும் சோதனை செய்த போது வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையின் உயிரற்ற உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஆஞ்சநேயுலு “குடும்ப தகராறு உட்பட அனைத்து கோணங்களிலும் நாங்கள் விசாரித்து வருகிறோம், இது ஒரு நிச்சயமான கொலை வழக்கு” என்று தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)





