இந்தியாவில் சத் பூஜையை முன்னிட்டு குளிக்க சென்ற 6 பேர் மரணம்
பீகாரின் பாகல்பூர்(Bhagalpur) மாவட்டத்தில் சத்(chhath) பண்டிகைக்கு முன்னதாக குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இஸ்மாயில்பூர்(Ismailpur) காவல் நிலையப் பகுதிக்குள் உள்ள நவ்டோலியாவில்(Navdolia) இந்த சம்பவம் நடந்ததாக நௌகாச்சியா(Naukachia) காவல்துறை அதிகாரி பிரேர்ணா குமார் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைத்து சிறுவர்களும் 10-15 வயதுக்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து, பண்டிகையை முன்னிட்டு சோன்(Sone) நதியில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன இரண்டு பேரின் உடல்கள் ஜார்க்கண்டின் பலாமு(Palamu) மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஹுசைனாபாத்(Hussainabad) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போக்ராஹி(Pokhrahi) கிராமத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் குளிக்க ஆறு பேர் சென்றனர், அவர்களில் இரண்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சாத் என்பது கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பண்டைய இந்தோ-நேபாள(Indo-Nepalese) இந்து பண்டிகையாகும்.
இது குறிப்பாக இந்திய மாநிலங்களான பீகார்(Bihar), ஜார்கண்ட்(Jharkhand) மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின்(eastern Uttar Pradesh) சில மாவட்டங்களிலும் நேபாளத்தின் கோஷி(Koshi), கண்டகி(Gandaki), பாக்மதி(Bagmati), லும்பினி(Lumbini) மற்றும் மாதேஷ்(Madhesh) மாகாணங்களிலும் கொண்டாடப்படுகிறது.
பண்டிகையின் ஒரு அம்சமாக ஆன்மீக மற்றும் உடல் சுத்திகரிப்பு அடைய பூஜைக்கு முன்னதாக மக்கள் குளிக்கின்றனர். இது விரதம் மற்றும் பக்தி நாட்களுக்கு உடலையும் மனதையும் தயார்படுத்துவதற்காக அசுத்தங்களைக் கழுவுவதைக் குறிக்கிறது.
மேலும் இது பெரும்பாலும் ஒரு புனித நதி அல்லது பிற இயற்கை நீர்நிலைகளில் செய்யப்படுகிறது.





