ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரையில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் அரசாங்கம் வெளியிடவில்லை.
ஜப்பான் நான்கு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பில் அமைந்துள்ளது மற்றும் ஆண்டுதோறும் உலகின் மிக சக்திவாய்ந்த பூகம்பங்கள் மற்றும் நடுக்கங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சந்திக்கிறது.
இதற்க்கு முன்னதாக 2011ல் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக 15,000க்கும் மேற்பட்ட மக்களைக் உயிரிழந்தனர் மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.





