20 வருட கார் விபத்து வழக்கில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 54 வயதான இந்தியர்

17 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் தேடப்படும் இந்திய குடிமகனை குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு 44 வயது நபர் ஒருவரின் உயிரைப் பறித்த விபத்தில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற 54 வயதான கணேஷ் ஷெனாய், மும்பையில் அமெரிக்க மார்ஷல்ஸ் சேவையால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டதாக நாசாவ் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“பல தசாப்தங்களாக சட்ட அமலாக்கத்தைத் தவிர்த்து தப்பிச் சென்ற பிறகு, 20 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளின் தந்தையின் துயர மரணத்திற்கு பதிலளிக்க எனது அலுவலகம் இறுதியாக இந்த பிரதிவாதியை அமெரிக்காவிற்கு திருப்பி அழைத்துவரப்பட்டுள்ளது” என்று வழக்கறிஞர் ஆன் டோனெல்லி குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 2005ல் நியூயார்க் நகர புறநகர்ப் பகுதியான ஹிக்ஸ்வில்லில் பாதிக்கப்பட்ட பிலிப் மாஸ்ட்ரோபோலோ வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.