வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகளின் போது 5 வீரர்கள்,25 பயங்கரவாதிகள் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இரு தனித்தனி இராணுவ நடவடிக்கைகளில் ஐந்து வீரர்கள் மற்றும் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் இன்று(26) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) ஒரு அறிக்கையில், வடக்கு வசிரிஸ்தான்(Waziristan) மற்றும் குர்ரம்(Kurram) மாவட்டங்களில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் திறம்பட செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு வசிரிஸ்தானில், நான்கு தற்கொலை குண்டுதாரிகள் உட்பட 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ISPR தெரிவித்துள்ளது.
அதேசமயம், குர்ரம் மாவட்டத்தின் காக்கி பகுதியில் மேலும் 10 ஊடுருவிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அது மேலும் கூறியது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.





