அயோத்தியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் மரணம்
அயோத்தியின் புரா கலந்தர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பக்லா பாரி கிராமத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தை தொடர்ந்து வீடு இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பிரதேச மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மூத்த காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டு வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை அறிந்து, உயிர் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.





