உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதரஸாவின் கழிப்பறைக்குள் இருந்து 40 சிறுமிகள் மீட்பு
உத்தரபிரதேசத்தில் பதிவு செய்யப்படாத மதரஸா ஒன்றின் கழிப்பறையில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட நாற்பது சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயாக்பூர் தாலுகாவின் கீழ் பஹல்வாரா கிராமத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்திற்குள் சட்டவிரோத மதரஸா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது.
புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது மொட்டை மாடியில் இருந்த கழிப்பறையில் சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
குறித்த சிறுமிகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அனைவரும் பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதரஸா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதை மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





