ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது நபர் கைது

வடக்கு பிரித்தானியாவில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“வால்சாலில்(Walsall) ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை இன ரீதியாக மோசமான தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். 32 வயதான அந்த நபர் பெர்ரி பார்(Berry Bar) பகுதியில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் பின்னணி குறித்த விவரங்களை காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், உள்ளூர் சமூக அமைப்புகள் அவர் பஞ்சாபி(Punjabi) பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இந்திய பெண்களுக்கு எதிரான இன ரீதியான தாக்குதல்கள் புதியவை அல்ல, சில வாரங்களுக்கு முன்பு, ஓல்ட்பரியில்(Oldbury) ஒரு பிரிட்டிஷ் சீக்கியப் பெண்ணும் இனரீதியாக தூண்டப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 4 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி