மருதானையில் சிறப்பு காவல்துறை நடவடிக்கையின் போது 30 பேர் கைது

மருதானை, ஸ்ட்ரோக் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 30 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் முக்கிய வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகளும் அடங்குவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் இலங்கை காவல்துறையுடன் இராணுவமும் பங்கேற்றது.
குறித்த சிறப்பு நடவடிக்கை இலங்கை ஜனாதிபதி அனுர குமார அவர்களின் உத்தரவில் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சிறப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள போதைப்பொருள் வியாபாரிகள் , போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ள பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)