ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொள்ள தயாராகும் 3 லட்சம் மக்கள்
ஜெர்மன் நாட்டுக்கு 3 லட்சம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொள்வார் என்று ஒரு புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் மொத்தமாக 3 லட்சம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொள்வார்கள் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் உள் ஊர் ஆட்சி அமைச்சர் நான்சி வேசர் அவர்கள் 16.10.2023 ஆம் ஆண்டு ஜெர்மனியின் எல்லை சோதனைகளை முடக்கியுள்ளார்.
இந்த எல்லை சோதனைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகளுடைய குடியேற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த நவம்பர் மாதம் 35000 பேர் மட்டுமே ஜெர்மன் நாட்டுக்குள் வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது வரை ஜெர்மன் பொலிஸார் 9200 பேர் சட்டவிரோதமான முறையில் ஜெர்மன் நாட்டுக்குள் உள் நுழைய முனைந்துள்ளார்ககள்.
(Visited 6 times, 1 visits today)