சிங்கப்பூரில் சட்ட விரோதமாக வீசாவுக்கான பத்திரங்களை வழங்கிய 27 பேர் கைது
சிங்கப்பூரில் வேலைசெய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களை அழைத்து வர சட்டவிரோதமாக வீசா பெறுவதற்கான பிரகடன பத்திரங்களை பொய்யாக மேற்கொண்டதாக 27 பேர் சிங்கப்பூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்தவர்கள் மீது சட்டவிரோதமாக வேளையில் அமர்த்தியது, பொய்யான உறுதி ஆவணம் வழங்குதல் , நிறுவங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொழிலார்களுக்குக்கான எண்ணிக்கையில் மோசடி செய்தல் போன்ற குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகளின் பொழுது 19 இடங்களுக்கு அதிகாரிகள் சென்று இருந்தார்கள். இவ்வாறு நடைபெற்ற சோதனைகளின் பொழுது 290 தொழிலார்களை இந்த 9 நிறுவனங்கள் நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அமைச்சு குற்றம் சாட்டி உள்ளது.
இதனை தொடர்ந்து 27 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சிங்கப்பூர் நிறுவங்கள் முறையான அனுமதி இன்றி வெளிநாட்டு தொழிலார்களை பணியில் அமர்த்தினால் $5000-$30000 வரை அபராதமும் ஒருவருட சிறை ஆழ்ந்து இரண்டும் பெறக்கூடும். இவர்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டு தொழிலார்களை பணியில் அமர்த்துவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள்.
வெளிநாட்டவர்கள் சட்ட விரோதமாக வேலை செய்தால், $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், மேலும் இரண்டு வருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். தண்டனைகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் எப்பொழுதும் வேலை செய்வதில் இருந்து தடை விதிக்கப்படும்.