உலகம் செய்தி

சீனாவில் முக்கிய மூலப்பொருளை உரிமம் இன்றி ஏற்றுமதி செய்த 27 பேர் கைது!!

ஏற்றுமதி உரிமம் இன்றி ஆன்டிமனி இங்காட்களை ( antimony ingots) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த 27 சீன பிரஜைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனா உலகின் மிகப்பெரிய ஆன்டிமனி உற்பத்தியாளராக உள்ளது. இது பேட்டரிகள், சில்லுகள், சுடர் தடுப்பு மருந்துகள் மற்றும் வெடிமருந்துகள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் மற்றும் பலவற்றை தயாரிப்பதற்கு  மூலோபாய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆன்டிமனி இங்காட்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை தொடர்ந்து ஏற்றுமதி கட்டுப்பாட்டு தடையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. இருப்பினும் தற்போதும் இந்த மூலக்கூறுக்கான ஏற்றுமதி தடை தொடர்கிறது.

இவற்றை ஏற்றுமதி செய்ய அரசாங்கத்தின் உரிமத்தை பெறவேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுத்த 27 பேருக்கு எதிராகவே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளியான வாங் வுபினுக்கு (Wang Wubin) 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 1 மில்லியன் யுவான் ($141,899) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற 26 பேருக்கும் குற்றத்தின் அளவை பொறுத்து 04 மாதங்கள் முதல் 05 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!