செய்தி வட அமெரிக்கா

2024ல் மீண்டும் போட்டியிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான் மீண்டும்  2024 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் அதை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நான் ஓடத் திட்டமிட்டுள்ளேன்,  ஆனால் நாங்கள் அதை இன்னும் அறிவிக்கத் தயாராக இல்லை என்று பைடன்  வெள்ளை மாளிகையின் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகின்றது.

2024 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தான் போட்டியிட விரும்புவதாகக் கூறிய பைடன், முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.

பைடன்  மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இருவரும் இணைந்து போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

பைடனின் அடுத்த தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவது குறித்து வெள்ளை மாளிகையின் உயர்மட்ட ஆலோசகர்கள் இறுதி முடிவுகளை எடுக்க உள்ளனர் எனவும்  பல மறைமுக ஆதாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று  தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி