ராஜஸ்தானில் மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்து குடித்த 2 குழந்தைகள் மரணம்
ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக ஒரு மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து கடந்த இரண்டு வாரங்களில் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கும் குறைந்தது 10 பேர் நோய்வாய்ப்பட்டதற்கும் வழிவகுத்துள்ளது.
மாநிலத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மருந்து நிறுவனமான கேசன் பார்மாவால் வழங்கப்பட்ட இந்த மருந்து குறித்து காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு கொண்ட இந்த மருந்தின் ஆபத்து, சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நிதிஷ் உயிரிழந்த பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிரானா சமூக சுகாதார மையத்தில் ஒரு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை அவரது தாயார் வழங்கியுள்ளார். பின்னர் நிதீஷ் அதிகாலை விக்கல் ஏற்பட்டு எழுந்தார், தண்ணீர் குடித்த பிறகு மீண்டும் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலையில் சிறுவன் எழும்பாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஷின் மரணத்திற்குப் பிறகு, பாரத்பூரில் உள்ள இரண்டு வயது குழந்தை சாம்ராட் ஜாதவின் குடும்பத்தினர் செப்டம்பர் 22ம் திகதி அதே இருமல் மருந்தின் விளைவால் தனது குழந்தை இறந்ததாக உணர்ந்துள்ளனர்.
சாம்ராட் மற்றும் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கும் அந்த மருந்து வழங்கப்பட்டது. மற்ற குழந்தை இறுதியில் விழித்தெழுந்து வாந்தி எடுத்த நிலையில், சாம்ராட் மயக்கமடைந்து ஜெய்ப்பூரின் ஜே.கே. லோன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.





