இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் இருக்கும் 17000 குழந்தைகள்!
இலங்கை முழுவதும் 17,000 குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு குழந்தையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு வாழ ஏற்ற ஒரு நாட்டை உருவாக்க ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 6 times, 6 visits today)





