விமான சக்கரத்தில் ஒளிந்து காபூலில் இருந்து டெல்லி வந்த 13 வயது சிறுவன்

காபூலில் இருந்து சட்டவிரோதமாக விமான சக்கரத்தில் பயணித்து 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் ஒருவர் இந்திய தலைநகர் டெல்லியை வந்தடைந்துள்ளார்.
காபூலில் இருந்து புறப்பட்ட KAM ஏர்லைன்ஸ் விமானத்தின் தரையிறங்கும் சக்கர பெட்டிக்குள் நுழைந்த சிறுவன் 2 மணி நேர ஆபத்தான பயணத்திற்குப் பிறகு இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமானம் தரையிறங்கிய பிறகு சுற்றித் திரிந்த 13 வயது சிறுவன் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரத்தைச் சேர்ந்த சிறுவன், விமான ஊழியர்களால் கைது செய்யப்பட்டு, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈரானுக்கு செல்ல திட்டமிட்டதாகவும், தவறுதலான விமானத்தில் ஏறி இந்தியாவிற்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.