மியன்மாரில் 10 இலட்சம் மக்களின் வாழ்விடம் பாதிப்பு

மியன்மாரில் மன்டலே பிராந்தியத்தை அண்மித்து நேற்று இடம்பெற்ற நில நடுக்கத்தில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்க புவி ஆராய்ச்சி மையம் ஆகியன எதிர்ப்பு கூறியுள்ளன
நேற்றைய நிலநடுக்கத்தை அடுத்து பிராந்தியத்தில் மேலும் 14 அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் எதிர்ப்பு கூறியதற்கு இணங்க இழப்பு குறித்த தகவல்களை வெளி உலகத்துக்கு அறிவிக்காத இருந்த இராணுவ அரசு அழிவின் அவலங்களை படிப்படியாக அறிவிப்பதன் மூலம் சர்வதேச நாடுகளில் உதவியை கூறியுள்ளது.
மியன்மாரின் தற்போதைய கள நிலமைகளுக்கு இடங்க நில அதிர்வு ஏற்பட்ட பிரதேசங்களில் 18 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் இவர்களில் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இராணுவ அரசாங்கத்தின் தகவல்களுக்கு இணங்க கனரக வாகனங்களின் காரணமாக இடி பாடுகளை அகற்றவும் சிதைவுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பது கடினமான காரியமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மியன்மாரில் இந்த பேரளவில் 10000 க்கும் அதிகமான மக்கள் மரணித்திருக்கலாம் என்ற செய்தியை அமெரிக்க நில அதிர்வு ஆய்வு மையம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளமையை அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளன.
இந்த பூகம்ப பேரழிவால் 3900 பாரிய கட்டிடங்கள் பிரதான வீதிகள் 07 பாலங்கள் அழிவுக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் தென் கொரியா 02 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா 13 மில்லியன் மூலம் அமெரிக்க டொலர்களை தற்காலிக கூடாரங்கள் உணவு உடை வகைகள் மற்றும் வைத்திய உதவிகளை வழங்க முன் வந்துள்ளது.