ஹைதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க 10 லட்சம்
இந்த ஆண்டின் இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு நிகழ்விற்காக அர்ஜென்டினா(Argentina) கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) ஹைதராபாத்(Hyderabad) வருகை தரவுள்ளார்.
குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான தி கோட் இந்தியா டூர்(The GOAT India Tour), மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.9.95 லட்சம் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி(Parvathy Reddy), மெஸ்ஸி வருகிற 13ந் திகதி மாலை ஐதராபாத் வருகிறார். ஃபலக்னுமா(Falaknuma) அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்திக்கலாம். நிகழ்வில் நீங்கள் அவருடன் புகைப்படம் எடுக்கலாம். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரூ.9.95 லட்சம் (GST) செலவாகும். இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில்(district app) கிடைக்கும். 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.





