We-Transferக்கு மாற்றாக உள்ள 10 செயலிகள்
We-Transfer என்பது இரண்டு டிவைஸ்களுக்கு இடையே பைல்களை மிகவும் விரைவாக பரிமாறி கொள்ள உதவும் ஒரு செயலியாகும். இலவசமாகவும் மிகவும் விரைவாகவும் யூசர்கள் பைல்களை இந்த செயலியை பயன்படுத்தி பரிமாறிக் கொள்ள முடியும்.
நீண்ட காலமாக யூசர்கள் பைல்களை பரிமாறிக் கொள்ள சிரமப்பட்டு வந்த நிலை, We-Transfer அறிமுகமான பின்பு முற்றிலும் சுலபமாக்கப்பட்டது . ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது, அது என்னவென்றால், We-Transfer செயலியை பயன்படுத்தி அதிகபட்சம் 2ஜிபி அளவிலான பைல்களை மட்டுமே யூசர்கள் பரிமாறிக் கொள்ள முடியும்.
இதன் காரணமாக இரண்டு ஜிபிக்கு மேல் உள்ள பைல்களை பரிமாறி கொள்வதற்கு யூசர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பைல்களை விரைவாகவும், இலவசமாகவும், பாதுகாப்பாகவும் பரிமாறிக் கொள்ள வேறு பல செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அந்த வகையில் சந்தையில் இலவசமாக கிடைக்கக்கூடிய 10 பைல் ட்ரான்ஸ்ஃபர் செயலிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஸ்மாஷ்
கூகுள் டிரைவ்
ட்ராப் பாக்ஸ்
ஒன் ட்ரைவ்
சென்ட் எனிவேர்
ஃபயர் ஃபாக்ஸ் சென்ட்
டெரா ஷேர்
ஐஸ் ட்ரைவ்
ஹை டெயில்
சார்ஜ் சவுண்ட்
மேலே குறிப்பிட்டுள்ள இந்த 10 செயலிகளும் பைல்களை விரைவாக பகிர்ந்து கொள்ள உதவுகின்றன. இவற்றில் கூகுள் டிரைவ் மற்றும் ஸ்மாஷ் ஆகிய இரண்டு செயளிகலுமே மிகவும் சிறந்த செயலிகளாக யூசர்களால் கருதப்படுகிறது.
இதில் கூகுள் டிரைவ் என்பது கிளவுட் பேஸ்டு ஸ்டோரேஜ் சர்வீஸ் ஆகும். கூகுள் நிறுவனமானது இந்த சேவையின் மூலம் யூசர்கள் தங்களுக்கு தேவையான கோப்புகளை ஆன்லைனில் இலவசமாக சேமித்து வைக்க அனுமதி அளிக்கிறது. மேலும் கூகுள் டிரைவை கொண்டு மற்றவர்களுக்கும் நீங்கள் கோப்புகளை பரிமாறிக் கொள்ள அனுமதி அளிப்பதோடு, அவற்றை எடிட் மற்றும் கமெண்ட் செய்யும் அனுமதியையும் கொடுத்துள்ளது.
மறுமுனையில் ஸ்மாஷ் செயலியானது மிகவும் யூசர் பிரண்ட்லியாக இருக்கும் ஒரு செயலி ஆகும். எந்தவித சிரமமும் என்று யூசர்கள் இரண்டு டிவைசுகளுக்கிடையே பைல்களை பரிமாறிக் கொள்ள இது உதவுகிறது. கிட்டத்தட்ட விட்ரான்ஸ்ஃபர் செயலியை போலவே மிகவும் விரைவாக பைல்களை பரிமாறிக் கொள்ள இது உதவுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதலங்கலிளும் யூசர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மிகவும் எளிதாக நீங்கள் அனுப்ப வேண்டிய பைல்களை டிராப் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் நபருக்கு பைலை அனுப்ப முடியும். மேலும் கூகுள் டிரைவை போலவே புதிதாக ஒரு லிங்கை உருவாக்கி அவற்றை மற்றவர்களுடைய இமெயில் ஐடிக்கு அனுப்புவதன் மூலமும் உங்களால் கோப்புகளை பரிமாறிக் கொள்ள இயலும்.
We-Transfer செயலி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டாலும் இப்போது வரை ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இது ஆக்டிவாக உள்ளது, இதனை யூசர்களும் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
2020 ஆம் ஆண்டு இந்திய தொலைதொடர்பு துறை பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு We-Transfer உட்பட பல்வேறு செயலிகள் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.