ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை – 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தில்

2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வால் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அதிக வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என மோனாஷ் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, ஆஸ்திரேலியாவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகதியில் கடுமையான வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியில் 4 வருட காலப்பகுதியில் 1,009 பேர் வெப்ப அலைகளில் உயிரிழந்துள்ளனர்.
ஏழைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் வெப்ப அலையில் இறக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன, இது வொஷிங்டனை விட 3 மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
1844 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையில் ஆஸ்திரேலியாவில் குறைந்தது 5,332 மரணங்கள் கடுமையான வெப்பம் காரணமாக நிகழ்ந்துள்ளது.
1900ஆம் ஆண்டுமுதல் 4,555 மரணங்கள் உட்பட, இது மற்ற அனைத்து இயற்கை ஆபத்துகளாலும் நேரடியாக ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
மோனாஷ் ஆராய்ச்சிக்கு கூடுதலாக, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்த அரசாங்கத்தின் மிகப்பெரிய ஆய்வு வெளியிடப்பட்டது.