இத்தாலியில் விசேட சோதனையின் போது 1.4 டன் போதைப்பொருள் பறிமுதல் – 384 பேர் கைது
இத்தாலிய(Italy) காவல்துறை, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடத்திய பெரிய அளவிலான நடவடிக்கையில் 384 பேரைக் கைது செய்து 1.4 டன் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.
கைதுகளுக்கு மேலதிகமாக, 39 சிறுவர்கள் உட்பட 655 நபர்களை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர், மேலும் 40க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர் என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நடந்த 312 ஆய்வுகளுக்குப் பிறகு மூன்று நகரங்களில் ஐந்து கஞ்சா கடைகள் மூடப்பட்டுள்ளன.
சோதனைகளின் போது, 296 கிலோகிராம் கஞ்சா பொருட்களைக் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.





