இலங்கை செய்தி

மாணவர்களை பரீட்சைக்கு அனுமதிக்காதமை தொடர்பில் விசாரணை!

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி  பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் அவர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பாடசாலை அதிபர்  பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.

தலைமுடியை வெட்டிய பின்னர் அந்த மாணவர்கள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படாமல் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை