ஆசியா செய்தி

மகன் முன்பே மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பெற்றோர்..!

பாகிஸ்தானில் பெற்றோர் மகனின் கண் முன்பே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெஷாவரின் ஷகாப் கேல் பகுதியைச் சேர்ந்தவர் பக்ஷீஷ். இவர் தனது மனைவி மிஸ்மா மற்றும் மகன் கான் ஜயீப்புடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது.இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பக்ஷீஷ், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென மனைவி மிஸ்மாவை சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் பக்கத்துக்கு அறைக்கு சென்று மற்றொரு துப்பாக்கியை எடுத்து வந்து கணவரை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.இந்த சம்பவம் மகனின் கண் முன்பே நடந்துள்ளததால் அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதற்கிடையில் மிஸ்மா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை மற்றும் ஆயுத பயன்பாடு பற்றிய தடவியல் அறிக்கை ஆகியவற்றை பொலிஸார் எதிர்நோக்கியுள்ளனர்.தனது தாயை தந்தை சுட்டதால், பதிலுக்கு மகன் ஜயீப் துப்பாக்கியால் பக்ஷீஷை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

பெஷாவர் நகரில் சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சனவரி மாதம் மசூதி மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், பொலிஸார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 10 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி