பிரித்தானியாவில் உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரிட்டனில் உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது, இது 3.7 மில்லியன் குழந்தைகளை பாதித்துள்ளது என்று ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுமார் 22 வீத குடும்பங்கள் நேரடியாக உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்ததாக கூறியுள்ளனர்.
இது ஜனவரி 2022 இல் கிட்டத்தட்ட 12 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அபாயத்தில் உள்ளவர்கள் மீது வாழ்க்கைச் செலவு நெருக்கடி பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று வலியுறுத்தியது.
இது அவர்களின் கல்வி, அவர்களின் நட்பு மற்றும் சமூக வளர்ச்சி, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வரை அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது எனவும், அவர்களின் குழந்தைப் பருவத்தைப் பறிக்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.