பிரான்ஸில் 22 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் வாகனம் ஒன்றுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Nangis (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
rue Bel-Air வீதியில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த Citroën DS3 வகை மகிழுந்துக்கு ஒன்றின் சாரதி இருக்கையில் வைத்து குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
கைத்துப்பாக்கி ஒன்றின் மூலம் அவர் இரு முறை சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜொந்தாமினர், முதற்கட்டமாக சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொல்லப்பட்ட இளைஞன் தனது பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





