படகுமூலம் சட்டவிரோதமாக பயணித்தால் பிரித்தானியாவில் தங்க முடியாது : நாடு கடத்தப்படுவார்கள் – ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு!
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்கள் அங்கு தங்கமுடியாது என்ற தகவலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் புலம்பெயர்வோருக்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்து சண்டே எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர், உள்துறை அலுவலகத்தின் மூத்த உதவியாளர்களும், வழக்கறிஞர்களும் இணைந்து புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேம்பட்ட வாழ்க்கைக்காக மக்கள் நாடுகடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்குடன் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோ குடியேற்றம் பற்றிய பிரச்சினையை எனது ஐந்து முதல் முன்னுரிமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளேன்.
சட்டவிரோத படகு பயணங்களை நிறுத்துவதாக நான் கொடுத்த வாக்குறியை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன். அதனால் யாரேனும் சட்டவிரோதமாக இங்கு வந்தால் தடுத்து வைக்கப்பட்டு பின் அகற்றப்படுவீர்கள்.
இதுவரை தொழிற்கட்சியானது சட்டவிரோத இடப்பெயர்வை நிறுத்துவற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது எனக் கூறினார்.
ஆத்துன் சட்டவிரோத பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர், கால்வாயை கடக்கும் சிறிய படகுகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவை செவ்வாய்க்கிழமை அறிக்கப்படும் எனவும் கூறினார்.
சிறிய படகுகளில் புலம்பெயர்வோரின் புகலிடக் கோரிக்கையை இரத்து செய்ய புதிய சட்டம் வழிச்செய்யும் எனவும் அவர் கூறினார். சிறிய படகில் வருபவர்கள் ருவாண்டா அல்லாது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கு மாற்றக்கூடிய வகையில் அதிகாரம் அளிப்பதற்கு புதிய சட்டம் வழியமைக்கும் எனவும் அவர் கூறினார்.