செய்தி வட அமெரிக்கா

பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொலிஸாரை அழைத்த நபர்: உள்ளே சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பொலிஸாருக்கு தகவலளித்தார் அமெரிக்கர் ஒருவர். பொலிஸார் அந்த வீட்டுக்கு விரைந்தபோது கண்ட காட்சி அவர்களை திடுக்கிடவைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும், வழக்கத்தைவிட பெரிய ஈக்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வருவதையும் கண்ட பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் பொலிஸாருக்கு தகவலளித்துள்ளார்.பொலிஸார் அந்த வீட்டுக்குச் செல்லவும், வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டுக்கொண்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடல் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.

அந்த வீட்டை பொலிஸார் சோதனையிடும்போது, வேறொரு அறைக்குள் மற்றொரு ஆணின் சடலம் கிடப்பதையும் பொலிஸார் கண்டுள்ளனர்.அந்த நபர் இறந்து பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என்பதை அவரது அழுகிய உடல் உணர்த்தியுள்ளது.

இப்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர், இறந்து அழுகிய நிலையில் காணப்பட்ட நபரின் உடலுடன் பல மாதங்களாக அதே வீட்டிலேயே வாழ்ந்துள்ளார்.அவர்கள் இருவருக்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. பொலிஸார் இந்த மரணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி