இலங்கை

நெருக்கடியான நேரத்திலும் பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை

நாட்டில் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தொடர்பில் கண்டி தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆசனவாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 67 வயதுடைய பெண் ஒருவரே உரிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

கண்டி தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலையின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி 67 வயதுடைய பெண் ஒருவரின் புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றுவதற்கு கண்டி தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழுவொன்று முயற்சித்துள்ளது.

இது குறித்து வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மருந்து கொடுக்கப் பயன்படும் சில சிரிஞ்ச்கள் வெட்டப்பட்டு போர்ட் தயாரிக்கப்பட்டது. பெரிய ஊசி மூலம் எண்டோஸ்கோபி கருவி செருகப்பட்டது. கிடைத்த படங்களின் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்தோம்.

கடினமான காலங்களில் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. நாங்கள் படித்தவர்கள். இந்த நாட்டு மக்கள் கொடுத்த, இலவசக் கல்வி மூலம் கற்றுக்கொண்டோம், ஜப்பானும், கொரியாவும் இதை விட அழிவை சந்தித்தது. அன்று நாட்டை விட்டு அவர்கள் வெளியேறியிருந்தால், இன்று ஜப்பானும், கொரியாவும் இருக்காது.

மருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் இல்லையென்றாலும், நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் ஒரே குறிக்கோளுடன் மருத்துவர்களும் ஊழியர்களும் இந்த கடுமையான சவாலை ஏற்றுக்கொள்கிறார்கள்.

12 மணி நேரம் இந்த அருவை சிகிச்சை மேற்கொள்ளப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்