நூதனமாக திருடும் சிவச்சந்திரன் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கைது
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் (54) என்பவரை கடந்த மூன்று மாதமாக பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.
நள்ளிரவு 2 மணியிலிருந்து காலை 5 மணி வரை மட்டுமே வீட்டை உடைத்து திருடக்கூடிய சிவச்சந்திரன் ஒரு வீட்டை திருட முற்படும்போது இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வீட்டை முழுவதுமாக கண்காணித்து எவ்விதமான ஆள் நடமாட்டம் இல்லை என்பதை தெரிந்து கொண்டே திருடுவதாகவும் இவரிடமிருந்து 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரு இன்னோவா கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சந்தீஸ் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சிவச்சந்திரன் குறித்து கேட்ட பொழுது சிவச்சந்திரன் பீளமேடு சிங்காநல்லூர் பகுதியில் மட்டுமே திருட முற்படுவதாகவும், திருடுவதற்கு பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனத்திற்கு கோவை புறநகர் பகுதியில் உள்ள அன்னூர் அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிப்பதாகவும், சிவச்சந்திரனை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 200 சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்ட பொது நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு சிவச்சந்திரனை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர பகுதியில் தற்போது கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா செல்லக்கூடிய நபர்கள் வீடு பூட்டி இருந்தால் அது குறித்து அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தினமும் இரவு காவல்துறையிலிருந்து வாகனம் ஒவ்வொரு பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.