நாற்காலிக்கு நடந்த சண்டை..சக ஊழியரே துப்பாக்கியால் சுட்ட நபர்!

இந்திய மாநிலம் ஹரியானாவில் நாற்காலியை தரமறுத்த ஊழியரை சக ஊழியர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பணியாற்றி வருபவர் அமன். இவரது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் விஷால் என்பவர் நாற்காலியை தரமறுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய விஷாலை பின்தொடர்ந்த அமன், திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளான விஷால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விஷாலை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விஷாலின் குடும்பத்திற்கும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அலுவலக நாற்காலி சண்டையில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.