டெல்லியில் கனமழை : விமான சேவைகள் முடக்கம்!

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 22 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்த 22 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
லக்னோ, ஜெய்ப்பூர், டேராடூன், அகமதாபாத், சண்டிகர் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் அதில் பயணம் செய்த விமான பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)